சேலம், ஜன.28: சேலம் மாவட்டம் மல்லூர் மேட்டுக்கடை ஏர்வாடியை சேர்ந்தவர் முருகேஷ்(48). டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் இரவு அரியானூரில் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு டூவீலரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். உத்தமசோழபுரம் அருகே வந்த முருகேஷ், டூவீலரை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பகுதியில் டூவீலரில் வந்த 2 பேர், பெட்ரோல் பங்க் இங்கு எங்கே இருக்கிறது என கேட்டுள்ளனர். அந்நேரத்தில் அவரது செல்போனை பறித்துகொண்டு இருவரும் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
