குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர், ஜன.28: விருதுநகரில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக கூறி பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விருதுநகர் நகராட்சி 7 வது வார்டுக்கு உட்பட்டது ஏ.டி.பி. காம்பவுண்டு. இங்குள்ள 3 வது தெருவில் சாலையின் நடுவே தனிநபர் ஒருவர் செப்டிக் டேங்கை கட்டியுள்ளார். இதற்கு அப்பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், கழிவு நீரானது, அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் புகுந்துள்ளதாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் போது கழிவு நீரும் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி பொது மக்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நகராட்சி ஆணையாளர் விஜயகுமார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

 

Related Stories: