இடைப்பாடி, ஜன.29: இடைப்பாடி அருகே பூலாம்பட்டி பேரூராட்சி காவிரி ஆற்றங்கரையில் 600 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் வரதராஜ பெருமாள் கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை (30ம் தேதி) காலை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடத்தை தலையில் சுமந்தபடி மாடு, எருது பம்பை மேளம் முழங்க, ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத்துறை தக்கார் சங்கர் கணேஷ், செயல் அலுவலர் மாதேஸ்வரன், இறையருள் நற்பணி மன்ற தலைவர் கோபால், துணைத்தலைவர் அழகுதுரை, செயலாளர் கணேசன், இணை செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் செவன் பிரஸ் முருகன், துணை செயலாளர்கள் ஜெயராமன், நடேசன், ராமலிங்கம், வெங்கடாசலம், பூபதி, வெங்கட் என்கிற வெங்கடாசலம், நிர்வாக குழு உறுப்பினர்கள் முரளி, கோவிந்தராஜன், ராஜேந்திரன், வரதராஜன், சுந்தரமூர்த்தி, சரண் கார்த்திக், முனியப்பன், முருகேசன், முரளிதரன், ஜெமினி, போட் என்கிற சுப்பிரமணி, நடராஜ், கோவிந்தராஜ், ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் நடந்தது. பின்னர், ஊர்வலம் கோயிலை அடைந்தது. இன்று (29ம் தேதி) மகா சாந்தி ஹோமம், 2ம் கால யாக பூஜை ஆரம்பம், 3ம் கால யாக பூஜை ஆரம்பம், நாளை (30ம் தேதி) காலையில் சிவகாமி சுந்தரி உடனமர் கைலாசநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இறை அருள் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
