சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றம்

காவேரிப்பட்டணம், ஜன.29: காவேரிப்பட்டணத்தில், சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி, தினகரன் செய்தி எதிரொலியால் இடித்து அகற்றப்பட்டது. காவேரிப்பட்டணம் ஒன்றியம், எர்ரஅள்ளி ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது. தூண்கள் பழுதாகி, சிமெண்ட் ஜல்லி கற்கள் கீழே பெயர்ந்து விழுவதால், கடந்த இரண்டு மாதமாக குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், நீர் ஏற்றுவதை ஊராட்சி நிர்வாகம் நிறுத்தினர். இதனால், காவேரிப்பட்டணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எதிரே அமைந்துள்ள முஜீப் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிவன் கோயில் அருகே உள்ள போர் பம்ப்பில் இருந்து, நேரடியாக வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

நேரடியாக போர்வெல் பம்பில் இருந்து, வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதால், அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மறு சீரமைப்பு செய்து, சீரான குடிநீர் வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகளின் கோரிக்கை விடுத்தனர். கடந்த கடந்த 2013 ஆம் ஆண்டு, ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நேர்த்தேக்க தொட்டி குறித்த செய்தி தினகரனில் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று சிதிலமடைந்து காணப்பட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அகற்றபட்டது. வட்டார வளர்ச்சி அலுவலரின் மேற்பார்வையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தகர்க்கப்பட்டு தற்போது பணிகள் விரைவாக செயல்பட்டு வருகிறது.

Related Stories: