தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற சாய்பாபா விரதம்: விதிமுறைகள் என்ன?

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம். விரதத்தை ஆரம்பிக்க முன்னர் சாயி நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். விரததத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு சாதித்துக் கொள்ள வேண்டும்.

வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருப்பதையும் சாய்பாபா பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

அதற்கெல்லாம் காரணம்... பல அதிசயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்து இருப்பது மட்டுமே. சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.

அவ்வாறு விரதம் இருக்கும்போது 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை மனதிற்குள் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட்டால் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம். அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது காலையோ அல்லது மாலையோ சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து, அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.

பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு. பின்னர் ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையையும் படிக்கலாம். பிறகு பூஜை செய்து நைவேத்தியம் அதாவது கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம். விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அதில் எந்த தவறும் இல்லை. அந்த வியாழக்கிழமையை கணக்கில் கொள்ளாமல் மற்றொரு வியாழக்கிழமை தொடர்ந்து விரதம் இருந்தால் ஒன்பது வியாழக்கிழமைகள் நிறைவு செய்ய முடியும்.

ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நேராக உணவளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமாகவோ உணவுப் பொருளாக கொடுத்து உதவி செய்வதை சாய்பாபா முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார். சாய் பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை அவர்களுக்கு எல்லா நலமும் பலமும் கிடைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. விதிமுறைகளின்படி விரதமும் விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Related Stories: