சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நடிகர்கள் ரவி மோகனும், கார்த்தியும் இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். ரவி மோகன் கடந்த ஆண்டு நடிகர் ஜெயராம் உடன் சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு தன்னுடைய நண்பர் கார்த்தியை அழைத்து சென்றிருந்தார். கார்த்தி சபரிமலைக்கு செல்வது இதுவே முதன்முறை ஆகும். அவர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டி கன்னிச் சாமியாக சபரிமலைக்கு சென்றார். கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றபோது கார்த்தி மற்றும் ரவி மோகன் இருவரும் மலையாள நடிகர் திலீப்பை சந்தித்து பேசியுள்ளனர்.