ஆர்கேவின் சாதனைகளை பாராட்டி உலக அளவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ ’ விருது’ ஆச்சே சுல்தானகம் மன்னர் கைகளால் வழங்கப்பட்டது. மேலும் ஆர்கேவை சிறப்பிக்கும் விதமாக கிட்டத்தட்ட 400 வருடம் பழமை வாய்ந்த இரண்டு வாள்களையும் அந்த நாட்டின் நினைவுச் சின்னமாக ஆர்கேவுக்கு தன் கையால் பரிசளித்துள்ளார் இந்தோனேஷியாவை சேர்ந்த ஆச்சே சுல்தானகம் மன்னர். அவற்றை இந்தியாவுக்கு கொண்டுவந்து பெருமை சேர்த்துள்ளார் ஆர்.கே இந்த விருது குறித்து நடிகர் ஆர்.கே பேசும்போது, “வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல. நமது கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன் தரவேண்டும் என நான் நினைக்கிறன். பழமை வாய்ந்த இரண்டு வாள்களை எனக்கு பரிசாகத் தந்ததில் பெருமை கொள்கிறேன்’’ என்றார். ஆர்கேவின் இந்த சாதனையை திரைத்துறையை சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.