சோஷியல் மீடியாவால் பாதிக்கப்படும் பெண்களின் கதை சாரி: ராம் கோபால் வர்மா

சென்னை, மார்ச் 31: ஆர்ஜிவி ஆர்வி புரொடக்‌ஷன்ஸ் எல்எல்பி சார்பில் ரவிசங்கர் வர்மா தயாரிக்க, இயக்குனர் ராம் கோபால் வர்மா திரைக்கதை எழுத, கிரி கிருஷ்ணா கமல் இயக்கியுள்ள படம், ‘சாரி’.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் 4ம் தேதி ரிலீசாகும் படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹீரோயின் ஆராத்யா தேவி பேசுகையில், ‘நான் கேரளாவை சேர்ந்தவள். படத்தில் ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கேரக் டரில் நடித்தேன். சோஷியல் மீடியாக்களின் நெகட்டிவ் மற்றும் இருட்டான பக்கங்களை பற்றி இப்படம் பேசி இருக்கிறது’ என்றார். ஹீரோ சத்யா யாது பேசும்போது, ‘நான் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவன். சைக்கலாஜிக்கல் திரில்லரான ‘சாரி’ படம், சோஷியல் மீடியா ஸ்டாக்கிங் பற்றி பேசுகிறது. பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் இப்படத்தை தங்களுடன் கனெக்ட் செய்துகொள்ளலாம்’ என்றார்.

ராம் கோபால் வர்மா பேசுகையில், ‘ஒவ்வொரு படத்துக்கும் ஒரு மையக்கரு இருக்கிறது. சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதே ‘சாரி’ படத்தின் கரு. சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து, அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும். ஆராத்யா கேரக்டரை போல், பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அதுபற்றி எல்லாம் ‘சாரி’ படம் பேசுகிறது’ என்றார்.

Related Stories: