பாலிவுட்டுக்கு நிகராக டோலிவுட் மாறி வருகிறது: மாளவிகா மோகனன்

சென்னை: தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், மாளவிகா மோகனன். தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’, தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தெலுங்கு படவுலகம் (டோலிவுட்), தற்போது இந்தி படவுலகம் (பாலிவுட்) மாதிரி மிகப்பெரிய அளவுக்கு மாறியுள்ளது. தெலுங்கு படத்தில் நடிக்காதவர்கள், உண்மையிலேயே சிறப்பான ஒன்றை இழக்கிறார்கள்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘இந்த 2025ம் ஆண்டு எனக்கு மிக அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. நான் நடித்து வரும் 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. ‘சர்தார் 2’, ‘ஹிருதயபூர்வம்’, ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களில் மிகவும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கிறேன்’ என்றார்.

இந்நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய மாளவிகா ேமாகனனிடம் ஒரு ரசிகர், ‘உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் படம் எது?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ‘சமீபகாலமாக தமிழில் நிறைய படங்கள் வெளியாகி வெற்றிபெற்று வருகின்றன. இதற்கு முன்பு வெளியான படங்களில் எனக்கு ‘96’ என்ற படம் மிகவும் பிடித்திருந்தது’ என்றார். மற்றொரு ரசிகர், ‘உங்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு எது?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ‘எனக்கு வைல்ட் லைஃப் போட்டோகிராபி என்றால் மிகவும் பிடிக்கும். அடர்ந்த காடுகளில் இருக்கும்போது, வழக்கத்ைத விட நான் அதிக சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருப்பேன்’ என்று சொன்னார்.

Related Stories: