விமர்சனம் தி டோர்

கட்டிடக்கலை நிபுணர் பாவனா, ஒரு புதிய புராஜெக்ட்டுக்காக ஒரு இடத்திலுள்ள புராதன கோயிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்கிறார். மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றும் அவரது தந்தை, பைக்கில் செல்லும்போது திடீரென்று மரணம் அடைகிறார். புதிய புராஜெக்ட்டின் கட்டுமான பணியில் தொடர்ந்து சில தற்கொலைகள் நடக்கின்றன. பாவனாவும், இன்னொரு பெண்ணும் தங்கியிருக் கும் வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடந்து அதிர வைக்கின்றன. பிறகு அமானுஷ்ய மர்மத்தை பாவனா மற்றும் போலீஸ் டீம் கண்டுபிடித்ததா என்பது கதை.

தமிழில் 15 வருட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகியுள்ள பாவனா, இப்படத்தை தனது தோளில் தூக்கி சுமந்து, தன் கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித் துள்ளார். அவர் அமானுஷ்ய சம்பவங்களால் அலறும் காட்சிகள் திகிலூட்டுகிறது. அவருடன் வீட்டில் தங்கி வெறுப்பேற்றும் சிந்தூரி, சஸ்பெண்ட் ஆனாலும் விசாரணையில் ஈடுபடும் போலீஸ் கணேஷ் வெங்கட்ராமன், அமானுஷ்யத்திலும் எனர்ஜி என்ற அறிவியல் இருக்கிறது என்று சொல்லும் ரமேஷ் ஆறுமுகம் மற்றும் ஜெயப்பிரகாஷ், ரஞ்சனி ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.

கொடைக்கானல் மற்றும் அமானுஷ்ய சம்பவம் நடக்கும் இரவு நேர காட்சியில் ஒளிப்பதி வாளர் கவுதம்.ஜி கடுமையாக உழைத்திருக்கிறார். பின்னணி இசையில் வருண் உன்னி பதற்றத்தை அதிகரித்துள்ளார். கெஸ்ட் ஹவுஸில் பாவனா சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் திகில் ஏற்படுத்துகிறது. ஹாரர் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் படத்தை பாவனாவின் அண்ணன் ஜெய்தேவ் எழுதி இயக்கியுள்ளார். இன்னும் கூட மிரட்டியிருக்கலாம்.

Related Stories: