பஹத் பாசில், வடிவேலுவின் மாரீசன் ஜூலையில் ரிலீஸ்

சென்னை: ‘மாமன்னன்’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்துள்ள படம், ‘மாரீசன்’. சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா நடித்துள்ளனர். ஹீரோயின் இல்லை என்று சொல்லப்படுகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.கிருஷ்ணமூர்த்தி கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்ய, மகேந்திரன் அரங்கம் அமைத்துள்ளார். டிராவலிங் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். வரும் ஜூலை மாதத்தில் திரைக்கு வரும் இப்படம், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 98வது படமாகும்.

Related Stories: