ஐதராபாத்: புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உருவாகிறது. மிக வித்தியாசமான கதையுடன் பிரமாண்டமாக உருவாக்கப்படும் இப்படத்தை புரி கனெக்ட்ஸ் நிறுவனத்துக்காக புரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கின்றனர். புரி ஜெகன்நாத் கூறுகையில், ‘விஜய் சேதுபதியை இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவருக்காக தனித்துவம் கொண்ட ஒரு கதையை எழுதியிருக்கிறேன். இதுவரை விஜய் சேதுபதியை இந்த மாதிரி கேரக்டரில் பார்த்திருக்க முடியாது. இப்படம் கண்டிப்பாக விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை வெளிப்படுத்தும்’ என்றார். வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. 5 மொழி படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளதால், இதை பான் இந்தியா படமாக உருவாக்குவதற்கு புரி ஜெகன்நாத், சார்மி கவுர் முடிவு செய்துள்ளனர்.