ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் பிளாக்மெயில்

சென்னை: இசை அமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் ஆகிய துறைகளில் பிசியாக இயங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம், ‘பிளாக்மெயில்’. இதன் பர்ஸ்ட் லுக்கை ரவி மோகன், விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர். அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’ ஆகிய மிஸ்ட்ரி திரில்லர் படங்களை இயக்கிய மு.மாறன், ‘பிளாக்மெயில்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். சான் லோகேஷ் எடிட்டிங் செய்ய, ராஜசேகர் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக தேஜூ அஸ்வினி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, ‘வேட்டை’ முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிப்பிரியா நடித்துள்ளனர். அடுத்த மாதம் படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: