விஷால் ஜோடியாகிறார் துஷாரா விஜயன்

சென்னை: அதர்வா முரளி நடித்திருந்த ‘ஈட்டி’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை இயக்கியவர், ரவி அரசு. அடுத்து கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. தற்போது விஷால் நடிக்கும் படத்தை ரவி அரசு இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான ‘மதகஜராஜா’ படம் பெரிய வெற்றிபெற்றது. இந்நிலையில், ரவி அரசு இயக்கத்தில் விஷால்
தயாரித்து நடிக்கும் படத்தை பற்றிய தகவல் வெளியானது. விஷால் ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.

Related Stories: