வீர தீர சூரன் 3ம் பாகம் உருவாகிறது: விக்ரம் தகவல்

சென்னை: எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘வீர தீர சூரன்: பாகம் 2’ என்ற படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து தமிழகத்திலுள்ள சில தியேட்டர்களுக்கு நேரில் சென்ற படக்குழுவினர், அங்குள்ள பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அப்போது விக்ரம் பேசுகையில், ‘இயக்குனர் அருண்குமாரின் திறமை என்னவென்றால், ஒரு கதாபாத்திரத்தை படத்தில் காட்டாமல், அதுபற்றி அனைவரையும் பேச வைத்துள்ளார். அது மிகவும் கடினம். முதல் பாகத்தில் பின்னணி கதையும், திலீப்
கதாபாத்திரமும் இருக்கும். பிறகு 3ம் பாகத்தில் வெங்கட் கதாபாத்திரம் இருக்கும்’ என்றார். அவர் அளித்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

Related Stories: