கண்ணப்பா ரிலீஸ் திடீர் மாற்றம்

ஐதராபாத்: பாலிவுட் டைரக்டர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மன்ச்சு, மோகன் பாபு, சரத்குமார், பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘கண்ணப்பா’. மோகன் பாபு தயாரித்துள்ளார். சிறப்பு வேடங்களில் பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இப்படத்தை விளம்பரப்படுத்த பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென்று ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

இப்படத்துக்கான கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வரும் 25ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்ட ‘கண்ணப்பா’ படம், தற்போது  இறுதிக்கட்ட பணிகளின் தாமதத்தால் ரிலீசாகவில்லை. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று விஷ்ணு மன்ச்சு கூறியுள்ளார்.

Related Stories: