தனது பெயரில் மோசடி கமல்ஹாசன் எச்சரிக்கை

சென்னை: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் என்ற பட நிறுவனத்தை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதன்மூலம் தான் நடிக்கும் படங்கள் மட்டுன்றி, மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில், தனது நிறுவனத்தின் பெயரில் ஒரு மோசடி நடந்து வருவதாக கமல்ஹாசன் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எந்தவகையிலும் உங்களை வந்தடைந்தால் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Stories: