மிகப்பெரிய போர் பற்றி பேசும் படம் சர்தார் 2: கார்த்தி திடுக்கிடும் தகவல்

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி எண்டர்டெயின் மெண்ட் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார், இஷான் சக்சேனா தயாரிக்க, ஏ.வெங்கடேஷ் இணை தயாரிப்பு செய்துள்ள படம், ‘சர்தார் 2’. கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு நடித்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கியுள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசியதாவது:

‘சர்தார்’ பெயரை கேட்டதும் அதிகமான ஆர்வம் ஏற்பட்டது. கிராமத்தை சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து உளவாளி யாக அனுப்பிய உண்மை சம்பவத்தை பி.எஸ்.மித்ரன் படமாக்கினார். ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான் என்ற லைன் மிகவும் பிடித்தது. 2ம் பாகத்தில் சர்தார் மிகப்பெரிய போர் நடத்தியுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பது நல்ல அனுபவம். பிரமாண்டமான அரங்குகளில் மித்ரன் படமாக்கிய காட்சிகள் பிரமிப்பாக இருக்கும்.

லக்‌ஷ்மன் குமார் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். ‘கைதி’ படத்துக்கு பிறகு சாம் சி.எஸ் அட்டகாசமான இசையை வழங்கியுள்ளார். இப்படம் சர்தார் ப்ரீக்குவல் மற்றும் சீக்குவல் ஆக இருக்கும். சர்தாரின் பிளாஷ்பேக்கில் கதை நடக்கும். மேக்கப் போட 4 மணி நேரமானது. மித்ரன் இயக்கியிருந்த ‘இரும்புத்திரை’ பார்த்த பின்பு, மொபைலில் மெசேஜ் வந்தாலே பயமாக இருக்கும். ‘சர்தார் 1’ பார்த்த பின்பு, வாட்டர் பாட்டிலை பார்த்தாலே பயமாக இருக்கும். ‘சர் தார் 2’ படத்தில் அச்சுறுத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய போர் பற்றி பேசியிருக்கிறார்.

Related Stories: