அஜித்தின் செகண்ட் சிங்கிள் அனிருத் பாடலுக்கு வரவேற்பு

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், பிரபு, ராகுல் தேவ், சுனில், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, அவினாஷ் நடித்துள்ள படம், ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘காட் பிளெஸ் யூ’ என்ற செகண்ட் சிங்கிள் லிரிக் வீடியோ வெளியானது. ரோகேஷ் எழுதியுள்ளார். ‘ராப்’ பகுதியை பால்டப்பா பாடியுள்ளார். ஏற்கனவே ‘வேதாளம்’ படத்துக்காக அனிருத் பாடியிருந்த ‘ஆலுமா டோலுமா’ என்ற பாடல் ஹிட்டானது. அதுபோல், இப்பாடலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ‘சக இசை அமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத் காம்பினேஷனில் உருவான பாடல் சூப்பராக இருக்கிறது’ என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Related Stories: