சென்னை: தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, எஸ்டிஆர் 49 படத்தினைத் தொடர்ந்து, 4வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் ‘இதயம் முரளி’ படத்தைத் தயாரிக்கிறது டான் பிக்சர்ஸ். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனராக அறிமுகமாகிறார். அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், நட்டி, தமன், நிஹாரிகா, ரக்சன், திராவிட், ஏஞ்சலின், பிரக்யா நாக்ரா, சுதாகர், யாஷஸ்ரீ நடிக்கிறார்கள்.
இசை – தமன் எஸ். ஒளிப்பதிவு – சிஹெச். சாய் சென்னை அருகே உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இதில் அதர்வா பேசும்போது, ‘‘ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் ஹிட் படம் ‘இதயம்’. அந்த படத்திலிருந்து வந்தது இதயம் முரளி பெயர். என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான். எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான். அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும்’’ என்றார்.