காமெடி கதை பாணிபூரி பிரேம்

சென்னை: கடந்த வருடம். ‘சித்தரிக்கப்பட்டவை’ என்ற வித்தியாசயான கதையில் நடித்த ஜி ராம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம்தான் ‘பாணிபூரி பிரேம்’. இதில் ஜி ராம், பிரியங்கா. ஜெயஸ்ரீ, ஜெயா, சர்மிளா. கெளசி, ஜெயபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். மணி அஜித் மூர்த்தி ஒளிப்பதிவையும், ரவி எடிட்டிங்கையும், துபாய் தியாகு இசையையும் கவனித்துள்ளனர். சண்முகம் தயாரிப்பு மேற்பார்வை. மகாமூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என். விஜயமுரளி தயாரித்துள்ளார். ஜி ராம் கூறும்போது, ‘‘வடமாநிலத்திலிருந்து வரும் ஹீரோ சென்னையில் வேலை தேடுகிறான். அவனுக்கு இங்கு அன்பு, பாசம் கிடைக்கிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் காமெடி கலந்த படமாக இதை கொண்டு செல்லும்’’ என்றார்.

Related Stories: