பிதாமகன் தந்த தைரியம்: பாலா 25 விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘வணங்கான்’. இப்படத்தை சுரேஷ் காமாட்சியும், பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற பொங்கல் பண்டிகைக்கு வணங்கான் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவோடு இயக்குனர் பாலா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினர். இதனால் இந்த விழாவுக்கு கோலிவுட் பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தனர். சிவகார்த்திகேயன், சூர்யா, மாரி செல்வராஜ், நிதிலன், இயக்குனர் மிஷ்கின், மணிரத்னம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது.

இதில் பேசிய சிவகார்த்திகேயன், “தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் கிளைமாக்ஸ் நெகடிவ் ஆகவோ அல்லது சோகமாகவோ இருந்தால் படம் பிளாப் ஆகிவிடும் என்கிற பிம்பம் இங்கு இருக்கிறது. அதனாலேயே ‘அமரன்’ பட கிளைமாக்ஸ் சோகமாக இருந்ததால் பயந்தேன். அதன்பின்னர் தான் பாலா சாரின் ‘பிதாமகன்’ படம் சோகமான கிளைமாக்ஸ் உடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றி அடைந்ததை அறிந்து அது எனக்கு நம்பிக்கை தந்தது. இந்த படம் அண்ணன் அருண் விஜய்க்கு மற்றொரு வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

Related Stories: