மேலக்கொட்டாரம் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

வி.கே.புரம்: வி.கே.புரம் மேலக்கொட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வி.கே.புரம் மேலக்கொட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகர் கோயிலில்  14ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜை தொடங்கியது. பாபநாசத்திலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட் டது. மாலையில் பெண்கள் அபிஷேக பொருட்களுடன் கீழக் கொட்டாரம் மாப்பிள்ளை விநாயகர் கோயிலிருந்து ஊர்வலமாக வந்தனர். நேற்று காலை 4மணி அளவில் நான்காம் கட்ட யாகசாலைபூஜை நடந்தது.

இதில் மஹாகணபதி ஹோமம், புண்யாவாஜனம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதணை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீசெல்வவிநாயகர், தட்சணமூர்த்தி, ஸ்ரீதுர்கை மற்றும் நவகிரகங்களுக்கு விமான அபிஷேகமும், கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், மகா தீபாராதணையும் நடந்தது. மதியம் மகேஸ்வரர்பூஜை, தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா, மதுரா கோட்ஸ் மில் பொறியாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மணிமுத்தாறு பேருராட்சி தலைவர் சிவன்பாபு,  அம்பை நகராட்சி முன்னாள் துணை தலைவர் மாரிமுத்து உட்பட பலர்கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர்த் தலைவர் ஆறுமுகம் செயலாளர் பால்ராஜ், பொருளாளர் அருணசலம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: