பெரம்பலூர், மார்ச் 28: பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டி மடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் விளை பொருட்களை eNAM திட்டத்தின் கீழ், தரகு, கமிஷன், பிடித்தமின்றி சரியாக எடையிட்டு அதிக விளைக்கு விற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விற்பனைகுழுவின் கட்டுப் பாட்டில் உள்ள பெரம்பலூர், அரியலூர், ஜெயங் கொண்டம் மற்றும் ஆண்டி மடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், மத்திய, மாநில அரசு வழி காட்டுதலின்படி, விவசாயிகளின் விளை பொருட்களை eNAM திட்டத்தின் கீழ், தரகு, கமிஷன் மற்றும் எந்த விதமான பிடித்தமின்றி விவசாயிகளின் விளை பொருட்களை, மின்னணு எடைத் தராசுகள் மூலம் சரியாக எடையிட்டு அதிக விளைக்கு விற்றுத்தர ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விளை வீழ்ச்சிக் காலங்களில் விளை பொருட்களை விற்பனைக் கூட கிட்டங்கிகளிலும், WDRO பதிவுபெற்ற கிட்டங்கிகளிலும் இருப்பு வைத்து, விவசாயிகள் 5 சதவீத வட்டி வீதத்திலும், வியாபாரிகள் 9 சதவீத வட்டி வீதத்திலும் பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம். WDRO பதிவுபெற்ற கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு வங்கி வாயிலாக அதிகபட்ச கடன் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருளீட்டுக் கடன் தேவைப்படாத பட்சத்தில், கிட்டங்குகளில் விளை பொருட்களை இருப்பு வைத்து, விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 0.25 பைசா என்ற அடிப்படையிலும், வியாபாரிகள் குவிண்டால் ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 0.50 பைசா என்ற வாடகை அடிப்படையிலும் இருப்பு வைத்துப் பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளின் விளை பொருட்களை கமிஷன், பிடித்தமின்றி விற்க ஏற்பாடு appeared first on Dinakaran.