பெரம்பலூர், மார்ச் 29: பெரம்பலூரில் இலவச தையல்கலை பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச தையல் கலை பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஓபி.ன் கிராமிய சுயவேலைவாய்ப்பு மையத்தின் இயக்குநர் ஆனந்தி தெரிவித்துள்ளதாவது :
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் மகளிருக்கு இலவச தையல்கலை பயிற்சி வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல் அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோட், பட்டுப் பாவாடை, யூனிஃபார்ம் ஸ்கர்ட், அரைக்கை சர்ட், யூனிஃபார்ம் டிராயர், பேபி ஃபிராக், கட்டோரிபிளவுஸ் , நைட்டி, சுடிதார் டாப், அம்பர் லா டாப், நைட்சூட் தயாரிக்கும் பயிற்சிகள் சிறந்த வல்லுநர்களால் கற்றுத் தரப்பட இருக்கிறது. 19 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டு, குறைவாக, எழுதப் படிக்கத் தெரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
பயிற்சியின் கால அளவு 30 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். ஒரு மாத பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கிக்கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழி காட்டப்படும்.
பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வரும் ஏப்ரல் 2ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது 04328 – 277896, 9488840328 என்ற தொலைபேசி மற்றும் செல்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூரில் மகளிருக்கான இலவச தையல்கலை பயிற்சி appeared first on Dinakaran.