பெரம்பலூர், மார்ச் 28: பெரம்பலூரில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் சையது மாலிக் மகன் அப்துல் கலாம் (19). இவர் பழச்சாறு விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அப்துல்கலாம் நேற்று முன்தினம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற கண்டெனர் லாரி எதிர்பாராத விதமாக அப்துல்கலாம் ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் அப்துல்கலாம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, எழுநூற்று மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஷீர் முகமது (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெரம்பலூரில் கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.