பெரம்பலூர்,மார்ச் 25: பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட முன்னாள் படைவீரர், அவர் தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணி புரியும் வீரர்களின் குடும்பத்தினருக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4-மணிக்கு கலெக்டர் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடை பெறவுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தாம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களைச் சேர்ந்தோர் தங்களது கோரிக்கையினை மனுவாக மாவட்டக் கலெக்டரிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக் கலாம். மேலும், மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனு மற்றும் தொடர்புடைய ஆவ ணங்களை இரு பிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.