பெரம்பலூர், மார்ச் 30: அம்மாப்பாளையத்தில் உதவிமின் பொறியாளர் பிரிவு அலுவலகம் இட மாற்றம் செய்யப்படுவதாக கோட்டசெயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்ட செயற் பொறியாளர்அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மின்பகிமான வட்டம், பெரம்பலூர் உப கோட்டம். அம்மாபாளையம் கிராமத்தில் 4/403, மெயின் ரோடு, அம்மாபாளையம் என்ற முகவரியில் தற்பொழுது இயங்கி வரும் உதவி மின்பொறியாளர் (இயக்கலும் மற்றும் காத்தலும்) அம்மாப்பாளையம் பிரிவு அலுவலகம், நிர்வாகக் காரணங்களுக்காகவும், பொதுமக்கள் நலனுக்காக வும், கதவு. எண்2/247. பெருமாள் கோவில் தெரு, 2 வது வார்டு, அம்மாப் பாளையம் என்ற புதிய முகவரியில் வருகிற ஏப்.1ம்தேதி முதல் இட மாற்றம் செய்யப்பட உள்ளது என பெரம்பலூர் கோட்டசெயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
The post அம்மாபாளையத்தில் மின்வாரிய அலுவலகம் ஏப்.1 முதல் இடமாற்றம் appeared first on Dinakaran.