தா.பழூர், மார்ச் 27: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் அணைக்குடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணைக்குடி தொடக்கப்பள்ளி அருகே வந்தமாட்டு வண்டியை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் அரசு அனுமதி இன்றி அணைக்குடி கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளில் இருந்து அருள்மொழி பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. பின்னர் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டி ஓட்டி வந்த அருள்மொழி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் ( 56 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு அனுமதி இன்றி மணல் கடத்தியவர் கைது மாட்டு வண்டி பறிமுதல் appeared first on Dinakaran.