பெரம்பலூர் மாவட்ட பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ ஆலோசனை முகாம்

 

பெரம்பலூர், மார்ச் 25: பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ”என் கல்லூரிக் கனவு” ஆலோசனை முகாம் வரும் 29ஆம் தேதி நடை பெறவுள்ளது என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:

பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறையின் சார்பில், வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை பெரம்பலூர், துறையூர் ரோடு, தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின், பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர மாணவ மாணவியருக்கு, ”என் கல்லூரிக் கனவு” உயர் கல்வி வாய்ப்புகள், தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து, தொழில் வழி காட்டு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், கலந்து கொள்ளவரும் மாணவ மாணவியர் அனைவரும் கட்டாயம் தங்களின் EMIS எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் வரவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் மற்றும் இதர மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: