அரியலூர், மார்ச் 27: தமிழக காவல்துறையில் எவ்வித களங்கமும் இன்றி 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசால் நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் 1997 பேட்ச்ல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் எவ்வித களங்கமும் இன்றி சிறப்பாக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் 19 பேரை, நேற்று அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் நற்சான்றிதழ் மற்றும் பணவெகுமதி அளித்து பாராட்டினார். தொடர்ந்து, அரியலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும், காவலர்களின் வாரிசுகள் 10 பேருக்கு உயர்க்கல்வி பயில்வதற்கு, தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கி பாராட்டினார் .
The post 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ், பண வெகுமதி appeared first on Dinakaran.