வீட்டுப்பணியாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க பெரம்பலூரில் சிறப்பு முகாம்

பெரம்பலூர், மார்ச் 30: தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான சிறப்பு முகாம் ஏப்ரல் 2ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :சென்னையிலுள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் மற்றும் கூடுதல் தொழிலாளர் ஆணையர், திருச்சியிலுள்ள தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரிய கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் திருச்சி, தொழிலாளர் இணை ஆணையர் ஆகியோரது அறிவுறுத்தலின்படி, அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்தல் குறித்து, வீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்காக சிறப்புமுகாம் வருகிற ஏப்ரல் 2ம் தேதி பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாது காப்புத் திட்டம்) அலுவலகத்தில் நடை பெறுகிறது.

இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் தங்களின் அசல் ஆவணங்களை (குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், வயதுக்கான சான்று மற்றும் புகைப்படம்) எடுத்து வந்து பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற வழிவகை செய்யப் பட்டு ள்ளது. பதிவு செய்வதுமுற் றிலும் இலவசம்.

தற்போது தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, பெர ம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகம், எம்.ஜி.ஆர் விளையாட்டு திடல் அருகில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புதிட் டம்) அலுவலகத்தில் அமை க்கப்பட்டுள்ளசிறப்பு முகாமில் நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறு பெ ரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகா ப்பு திட்டம்) பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post வீட்டுப்பணியாளர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க பெரம்பலூரில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: