குற்றவாளிகள், ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை

 

பெரம்பலூர், மார்ச் 26: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வழக்கமான குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிரடி சோதனையில் பெரம்பலூர் மாவட்ட போலீசார். மாவட்ட ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை, கள்ளச் சாராயம், கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை ஆகிவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா எடுத்து வருகின்றார்.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டு, மேலும் பெரம்பலூர் (உட்கோட்டம்) டிஎஸ்பி ஆரோகியராஜ்,பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் சதீஷ்குமார், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் டவுன் ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர், மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு நேற்று(25ஆம்தேதி) நேரில் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் மேற்படி குற்றப் பின்னணி உடைய நபர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தும், அவர்களின் செயல் பாடுகளில் சந்தேகம் ஏதேனும் உள்ளவாறு நடந்து கொண்டுள்ளார்களா என்பதையும் தீவிரமாக விசாரணை செய்தனர். இந்த அதிரடி சோத னை குறித்து பேசிய மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, இந்த சோதனையானது ரவுடிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகள், சந்தேக நபர்கள் ஆகியோர்களின் தற்போதைய செயல் பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளச் செய்யும் வழக்கமான சோதனை தான். குற்றம் நடவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெற்றது என்று தெரிவித்தார்.

The post குற்றவாளிகள், ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.

Related Stories: