நாளை மறுதினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

பெரம்பலூர், மார்ச் 26: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர்அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளைமறுநாள் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்டகலெக்டர் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post நாளை மறுதினம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: