பெரம்பலூர், மார்ச் 29: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, கிழுமத்தூர் காலனித் தெருவைச் சேர்ந்த பொது மக்கள் நேற்று (28ம் தேதி) காலை, இந்திய கம்யூ. கட்சியின் மாவட்ட செயலாளர் வேப்பந்தட்டை ஜெயராமன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, கிழுமத்தூர் காலனித் தெருவில் நாங்கள் வசித்து வருகிறோம். பெரும்பாலானோர் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். வறுமைக் கோட்டின்கீழ் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி சொந்த வீடு கட்டித்தர வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post கிழுமத்தூர் பூங்காநகர் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.