குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்ற 4 கடைகளுக்கு அபராதம்

பெரம்பலூர், மார்ச் 30: பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கோடைகாலம் என்பதால் குளி்ர்பானங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடை நிறுவனங்கள் எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரின்பேரில், பெரம்பலூர் புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில், துணை ஆய்வாளர் சரவணன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராணி ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இதில் நான்கு கடை நிறுவனங்களில் குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, நிறுவன உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் என 4 கடைகளுக்கும் ரூ.20 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்படி குற்றத்தை செய்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றவழக்கு தொடரப் படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்ற 4 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: