முதல்வர் குறித்து அவதூறு பேச்சு பாஜ நிர்வாகிகள் 2 பேர் கைது

கோவை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை, செல்வபுரம் என்.எஸ்.கே. சாலையில் பாஜ வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பாஜ ஆலய ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மண்டல தலைவர் துரை, துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசை அவதூறாக பேசி கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது அவதூறாக பேசுதல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post முதல்வர் குறித்து அவதூறு பேச்சு பாஜ நிர்வாகிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: