திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இதுவரை 2 லட்சம் இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பரமத்தி வேலூர் சேகர்(அதிமுக) பேசுகையில், ‘‘ விவசாய இலவச மின்சாரம் 31-3-2013 வரைதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகப்படியான இலவச மின் இணைப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, பதிவு செய்து காத்திருந்த விவசாயிகள், 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதலாக பதிவு செய்து காத்திருக்கிறவர்களுக்கு இந்த ஆண்டு முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

The post திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இதுவரை 2 லட்சம் இலவச மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: