சென்னை: சென்னை மாவட்ட கலெக்ட திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29ம் தேதி நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.