அமைச்சர் துரைமுருகன்: காவிரி – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நினைத்து தொடங்கியது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். நீங்கள் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தீர்களே, அந்த திட்டத்தை திரும்பி கூட ஏன் பார்க்கவில்லை. கால்வாய் வெட்டினால் தொடர்ச்சியாக வெட்ட வேண்டும். நீங்கள் என்ன செய்தீர்கள், இடை, இடையே இடைவெளி விட்டு கால்வாய் வெட்டினீர்கள். இந்த உலகத்திலே இப்படி இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு, யாரும் கால்வாய் வெட்ட மாட்டார்கள். இப்படி கால்வாய் வெட்டியது நீங்கள் தான்.
(அவையில் சிரிப்பு) எடப்பாடி பழனிசாமி: நிதி ஒதுக்காததற்கு ஏதேதோ காரணத்தை அமைச்சர் சொல்கிறார். அவருக்கு எல்லாமே தெரியும். மூத்த அமைச்சர். நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் தான் கால்வாய் வெட்ட முடியும். அதைத்தான் எங்கள் ஆட்சியில் செய்தோம். எனவே, சாக்குபோக்கு சொல்வதை விட்டு விட்டு, வேகமாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த திட்டத்தால் 5 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள். நீங்கள் செய்யவில்லை என்றால், மீண்டும் அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
அமைச்சர் துரைமுருகன்: இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
The post காவிரி – குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.