திருவண்ணாமலை தீபமலையில் பரபரப்பு: தியானத்துக்கு அழைத்து சென்று பிரான்ஸ் பெண் பலாத்காரம்: வாலிபர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப மலையில் தியானம் செய்தவற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயதுள்ள பெண், கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் தீபமலையில் உள்ள கந்தாஸ்ரமம் அருகே வெளிநாட்டு பெண் சென்றபோது, அவரை மிரட்டி வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அவரிடமிருந்து தப்பி வந்த வெளிநாட்டு பெண், திருவண்ணாமலை மேற்கு போலீஸ், பிரான்ஸ் நாட்டு தூதரகத்துக்கும் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி, திருவண்ணாமலை பே கோபுரம் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்(36) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா வழிகாட்டி என கூறி பல மொழிகளில் பேசி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்ரமத்துக்கு வந்த பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணிடம், தன்னை சுற்றுலா வழிகாட்டி என்று கூறி பிரெஞ்ச் மொழியில் பேசி அறிமுகமாகியுள்ளார். மலைமீது சென்று தியானம் செய்தால் பலன் கிடைக்கும் என நம்ப வைத்து, இளம்பெண்ணை கந்தாஸ்ரமம் வழியாக மலைக்கு அழைத்துச்சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் படம் பிடித்து மிரட்டியது தெரியவந்துள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச்சென்றபோது, வாகனத்தில் இருந்து கீழே விழுந்து வெங்கடேசன் கால் எலும்பு முறிந்தது. எனவே, அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

The post திருவண்ணாமலை தீபமலையில் பரபரப்பு: தியானத்துக்கு அழைத்து சென்று பிரான்ஸ் பெண் பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: