கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், டெல்லியில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தமிழகத்தில் 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறோம். ஒன்றிய அரசு அனுமதிக்கும்பட்சத்தில் அவர் கோருகின்ற இடத்தில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். (இதேபோன்று திருத்துறைப்பூண்டி மாரிமுத்து(இந்திய கம்யூனிஸ்ட்) தனது தொகுதியிலும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்)
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: நான் ஏற்கெனவே சொன்னது போன்று, தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. நாம் ஒன்றிய அரசைக் கேட்கிற போது, வட இந்தியாவைக் காட்டிலும் 3 மடங்கு ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உள்ளது. எனவே, இலக்கை தமிழ்நாடு முழுமையாக எட்டிவிட்டதால், இனிமேல் புதிதாக கேட்காதீர்கள் என்று சொல்கிறது. எனினும், இந்த ஆண்டும் 50 எண்ணிக்கையில் கேட்டிருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post தமிழகம் இலக்கை எட்டிவிட்டதால் கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி தர மறுக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.