செட் தேர்வுக்கான உத்தேச விடைகள் மீது ஆட்சேபணை தெரிவிக்க கால அவகாசம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடத்தப்பட்ட மாநில தகுதித்தேர்வுக்கான (செட்) தற்காலிக உத்தேச விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டன. உத்தேச விடைக்குறிப்புகள் மீது இணைவழியில் ஆட்சேபணை தெரிவிக்க மார்ச் 13 முதல் 15 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது தேர்வர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அக்கோரிக்கைகளை பரிசீலித்து உத்தேச விடைகள் மீது இணையவழியில் ஆட்சேபணை செய்ய காலநீட்டிப்பு வழங்க முடிவுசெய்யப்பட்டு காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேலும் தேர்வர்கள் தங்கள் விடைத்தாளை (Response Sheet) பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post செட் தேர்வுக்கான உத்தேச விடைகள் மீது ஆட்சேபணை தெரிவிக்க கால அவகாசம் appeared first on Dinakaran.

Related Stories: