புதுடெல்லி: மேற்குவங்க தேர்தல் நேரத்தில் ஐபேக் இயக்குநரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூக நிறுவனமாக ஐ-பேக் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவனம், அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின், வினேஷ் சண்டல் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிலக்கரி ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனை நடைபெற்ற இடங்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நுழைந்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை எடுத்துச் சென்றார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேற்குவங்க தேர்தல் நெருங்கும் நிலையில் ஐபேக் இயக்குநர் வினேஷ் சண்டலை அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக கைது செய்தது.
