கான்கேர்: சட்டீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் சோட்டேபேத்தியா-பர்தாபூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மச்சபள்ளி கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று காலை நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
பதுங்கி இருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். தொடர்ந்து வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து பெண் நக்சலின் சடலம் மீட்கப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்டவர் ரூபி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தலைக்கு போலீசார் ரூ.5லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தனர். அவரிடம் இருந்து வெடிப்பொருட்கள், கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
