2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

கறம்பக்குடி, மார்ச் 23: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கின்ற சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் உத்தரவின் படி அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அனைத்து இடங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கறம்பக்குடி அருகே கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதன் கோன் விடுதி 4 ரோடு சாலையில் கந்தர்வக்கோட்டையில் இருந்து திருவோணம் நோக்கி சென்ற கார்களை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்க வழங்குவதற்காக பணம், பரிசுபொருட்கள், எடுத்து செல்லப்படுகிறதா என சோதனையில் ஈடுப்பட்டனர். தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபதி தலைமையில் காவல் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

Related Stories: