முத்துப்பேட்டை,மார்ச் 23: முத்துப்பேட்டை அருகே உப்பூர் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீதரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் மாலை நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராமசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி தீபா, வழக்கறிஞர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஆசிரியர் அகிலா வரவேற்று பேசினார். பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள் அன்பழகன், செல்வசிதம்பரம், வீரப்பாண்டியன், சரவணன், தேவேந்திரன் ஆகியோர் வாழ்தி பேசினர். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர்கள், கிராம மக்கள் கலந்துக்கொண்டனர். நிறைவில் உதவி ஆசிரியை வனிதா நன்றி கூறினார்.
