நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்

நீடாமங்கலம்,மார்ச் 23: நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அருள் பாலித்து வரும் மகா மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு அணிவித்தல்நிகழ்ச்சியும், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று பக்தர்களில் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள்பால்குடம் எடுத்தனர். மதியம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதனைத் தொடர்ந்து வரும் 14ஆம் தேதி புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது. 16ஆம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியும், 19ஆம் தேதி பேச்சியம்மன் திருவிழாவும் நடைபெறுகிறது.

 

Related Stories: