திருச்சி துறையூர் அருகே வாகன சோதனையில் ரூ. 1 லட்சம் பறிமுதல்

துறையூர், மார்ச் 23: துறையூர் அருகே கண்ணனூரில் வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அரசு அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை சி டீம் அரவிந்தகுமார் தலைமையில் போலீசார் எஸ்ஐ கீதா, கலைச்செல்வன், லோகநாதன் ஆகியோர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது முசிறியில் இருந்து துறையூர் நோக்கி வழியாக வந்த 407 வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் தொட்டியம் அருகே பால சமுத்திரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்து(43), என்பவர் டிரைவர் வேலை செய்து வருகிறார். இவர் மளிகை ஸ்டோருக்கு பொருட்கள் வாங்க துறையூருக்கு வந்ததாகவும் உரிய ஆவணம் இல்லாமல் வைத்திருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தாசில்தார் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர்.

 

Related Stories: