தண்டராம்பட்டில் வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

தண்டராம்பட்டு, மார்ச் 23: செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தினை தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் கிருஷ்ணா பார்வையிட்டார். அப்போது சாய்தள வசதி, மின்சார வசதி கழிப்பறை வசதி வாக்காளர்களுக்கு உண்டான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தாசில்தார் தேன்மொழி, மண்டல துணை தாசில்தார்கள் மணவாளன், குமார், விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் பாக்யராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பத், பொற்செல்வன், சாலம்மாள், சித்ரா, உதவியாளர்கள் உடன் இருந்தனர். இதனை அடுத்து தண்டராம்பட்டு பேருந்து நிறுத்தம் அனைத்து கடைகளில் வரும் பொது மக்களிடம் 100% வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தை தாசில்தார் தேன்மொழி வழங்கினார்.

 

Related Stories: